Skip to main content

வேனில் திடீர் தீ விபத்து; ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசம்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Sudden fire accident in van in vellore

வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மாவட்டம் பனப்பாக்கத்தில் இருந்து அருள் என்பவருக்குச் சொந்தமான லோடு வேனில் வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக குடியாத்தம் பகுதிக்கு வந்தது. 

அப்போது, குடியாத்தம் அருகே நெல்லூர் பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்த வேனில் இருந்த வைக்கோல் மின் கம்பிகள் உரசி தீ பற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தீ மளமளவெனப் பரவிய நிலையில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் இருந்து உடனடியாக வேனை வேகமாக கொண்டு சென்று நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே வேனை ஓட்டுநர் நிறுத்தினார். 

இதனையடுத்து, இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வேனில் ஏற்றி வந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமானது. மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

 செல்போன் பழுது பார்க்கும் கடையில் திடீர் தீ விபத்து!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
sudden fire in a cell phone repair shop

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மேஸ்திரி வீதியில் எருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த அங்காளன் என்பவர் செல்போன் பழுது பார்க்கும் கடை  நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு கடையில் பணியை முடித்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கடையிலிருந்து திடீரென புகை வர ஆரம்பித்துள்ளது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினருக்கும் கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் தீ மளமளவெனப் பரவி கடையில் இருந்த செல்போன், லேப்டாப், மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் எனச் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் தீயில் கருகி சாம்பல் ஆனது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் பலி!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
youth passed away after falling into a ditch dug to build a bridge on the road

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேத்துவண்டை முதல் நெல்லூர் பேட்டை வரை புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே குடியாத்தம் சித்தூர் சாலையில் சித்தூர் கேட் அருகே பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று இரவு சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அர்ஜுன்(30) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்த அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் குடியாத்தம் டூ சித்தூர் சாலையில் தினமும் ஏராளமான கனரகம் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றதால் இந்த அசம்பாவிதம் நடந்ததாகக் கூறி உயிரிழந்த அர்ஜுன் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் சித்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். விபத்துகள் ஏற்படாவதவாறு ஒப்பந்த நிறுவனம் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அதிகாரிகள் சரியென்ற பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது.