குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் பெயர் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், முடிவை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம்; குற்றவியல் நடைமுறை சட்டம்; இந்தியச் சான்று சட்டம் ஆகியவற்றினுடைய பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தின் பெயரை பாரதிய நியாய சங்ஹீத எனவும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பெயரை பாரதிய நாகரிக் சுரக் ஷ சங்ஹீத எனவும், இந்திய சான்று சட்டத்தின் பெயரை பாரதிய சக்ஷயா எனவும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதற்கான மசோதாக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் சட்ட துறையினரின் எதிர்ப்பின் காரணமாக தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மத்திய அரசின் இந்த முடிவு தெரிய வருகிறது. இந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், பெயரை மாற்றும் முடிவை வாபஸ் பெற்றுள்ளது ஒன்றிய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.