வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் தகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இந்த முன்னறிவிப்பில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை வங்கக்கடலில் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.