கடந்த 2008-2009-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி முயற்சியினால் பெத்தேல்புரம் முதல் சிறுவாட்டுக்காடு வரை வனத்துறையின் மூலமாக புதிய தார்சாலை வசதி செய்யப்பட்டது. தி.மு.க ஆட்சி காலத்தில் மேற்கண்ட மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு 150 சோலார் விளக்குகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதன்பின்பு மாநிலங்களவை உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 150 சோலார் விளக்குகளும், 10 சோலார் தெருவிளக்குகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
மேலும் இப்பகுதியில் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து மின்சார வசதியே இல்லை. இங்கு 3 திறந்தவெளி கிணறுகள் வெட்டப்பட்டு அந்த கிணற்றிலிருந்து பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்திற்கான ஆயில் இன்ஜின் மூலம் நீரேற்றம் செய்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையை போக்க இக்கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தித்தர வேண்டுமென்று ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்களில் பலமுறை வலியுறுத்தியதின் பேரில் மின்சார வசதியே இதுவரை இல்லாத கிராமங்களான செட்டுக்காடு, தலையூத்துக்காடு, புலிக்குத்திக்காடு ஆகிய கிராமங்களுக்கு முதன்முறையாக மின்சார வசதி ஏற்படுத்தித்தருவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக ரூ.1.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிக்கான பூமிபூஜையை ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
இந்த கிராமங்கள் தோன்றிய காலத்திலிருந்து மின்சார வசதி இல்லாமல் இருளில் வாழ்ந்து வந்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இதில் மின்சார வாரிய அலுவலர்கள், ஒன்றிய துணைச் செயலாளர் பு.சிவக்குமார், வடகாடு ஊராட்சி செயலாளர் ப.செல்வராஜ், ஊராட்சி துணைச் செயலாளர்கள் பஞ்சவர்ணம் முருகேசன், பி.முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.டி.எம்.சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏ.திருமுருகசாமி, வார்டு செயலாளர்கள் ஜெயபாண்டி, த.சாமுவேல், ர.ரங்கசாமி, க.சக்திவேல் உள்பட அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.