Skip to main content

திருச்சியிலிருந்து தி.மு.க. சார்பில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பிய மு.க.ஸ்டாலின்

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
d

 

கடந்த 7 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் அடிப்படை ஆதாரங்களை பறிகொடுத்து விட்டு, உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி, உறங்க இடமின்றி, பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். உடனடியாக தோள் கொடுத்து காப்பாற்ற வேண்டிய தமிழக அரசோ, எந்த வித உதவியையும், சீரமைப்பு பணிகளையும், போதுமான அளவில் முறைப்படி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் போர்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலிருந்து மக்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்து பொருட்கள் உள்ளிட்ட அனைத்து நிவாரண பொருட்களையும், திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்கும் படி கட்சினருக்கு உத்தரவிட்டார். 

 

d

 

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து புதுக்கோட்டை, மற்றும் டெல்டா மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான தண்ணிர், அரிசி, கோதுமை, சர்க்கரை, பிரட், பிஸ்கட், ரவா, மைதா, மருந்து பொருட்கள், போர்வைகள், பாய், தலையனை, பிளாஸ்டிக், குடம், வாளி, மக்கு, மெழுகுவர்த்தி, வேஸ்டி, கைலி, புடவை, நைட்டி, நாப்கின், டி.சர்ட், துண்டு, உள்ளாடைகள், மளிகை சாமான்கள், சோப்பு, உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும், வேன், மற்றும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் கணக்கின்றி அனுப்பி வைத்தனர் .

 

s3

 

இன்று காலை 11 மணியளவில் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு தலைவர்.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து மக்களுக்கு தேவையான சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான அனைத்து பொருட்களையும் நேரில் பார்வையிட்டு சரிபார்த்து பின் ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட அனைத்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அனுப்பிவைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் .டி.ஆர்.பாலு, மாவட்ட செயலாளர்கள், கே.என்.நேரு மற்றும் ந.தியாகராஜன், பெரியண்ணன் அரசு, காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பழனி மாணிக்கம் , ரகுபதி, மற்றும் திருச்சி சிவா எம்.பி, எம்.எல்.ஏக்கள். சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், மாநகர செயலாளர்.மு.அன்பழகன், முன்னாள் எம்.எல்.எக்கள். அன்பில்பெரியசாமி, கே.என்.சேகரன், செவந்திங்கம், வக்கில்.ஓம்.பிரகாஷ், பாஸ்கரன், மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், முத்துசெல்வம், விஜயாஜெயராஜ், மற்றும் ஒன்றிய செயலாளர் கருப்பையா, துரைராஜ், சோமரசம்பேட்டை பழனியாண்டி, டோல்கேட் சுப்பிரமணி, தொ.மு.ச.நிர்வாகிகள், மாயழகு, குணசேகர், சிவபெருமாள், சிந்தை பாலமுருகன், எம்.ஆர்.எஸ்.குமார், மாருதி கண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்