சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடியை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
![chennai caa peoples old vannarapet](http://image.nakkheeran.in/cdn/farfuture/DjbmFVVGYphuKMkRzPf_E9tfRL1lLTrjh-PUMc5BJA8/1581711217/sites/default/files/inline-images/chennai8_0.jpg)
கைதானவர்கள் விடுவிக்கப்பட்டதால் போராட்டத்தை கைவிடுவதாக இஸ்லாமிய அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். அதேபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்
இந்நிலையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இரவிலும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிஏஏவுக்கு எதிரான சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பெண்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
![chennai caa peoples old vannarapet](http://image.nakkheeran.in/cdn/farfuture/eeWPdilodUUQBDPuUgJc6WuyxxXCBrp8FWNuCB6lNas/1581711234/sites/default/files/inline-images/c12.jpg)
சென்னையில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் கேட்டறிந்து வருகிறார். துணை ஆணையர்களிடம் வாக்கி டாக்கி மூலம் போராட்ட நிலவரங்களை காவல் ஆணையர் கேட்டறிந்து வருகிறார்.