Skip to main content

படகுடன் பாம்பன் மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம் 

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

 

படகுடன் பாம்பன் பகுதியை சேர்ந்த ஐந்து மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.
 

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து நேற்று 80க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கையின் தென் கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி பாம்பன் பகுதியை சேர்ந்த கொலம்பஸ் என்பவருக்கு சொந்தமான படகையும் அதில் இருந்த படகு உரிமையாளர் கொலம்பஸ், அருள்சகாயம், ஜெயகாந்தன், அடைக்கலம், முருகன் உட்பட ஐந்து மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் விசாரணைக்காக தலைமன்னார் கடற்படை முகாமிற்க்கு அழைத்து சென்று விசாரனை நடத்தி வருகின்றனர். விசாரனைக்கு பின்னர் மீனவர்களை மருத்துவ பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டு பின்னர் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஓப்படைக்கப்படவுள்ளனர். 
 

Tamil Nadu fishermen arrested



இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 13 பேரை வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் நேற்று இரவு அடைக்கப்பட்டனர். இதனால் மீனவர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது

சார்ந்த செய்திகள்