இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே திருப்பரங்குன்றம், திருவாரூரில் சுவர் விளம்பரம் உள்பட தனது கட்சியினரை இறக்கி தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் டி.டி.வி. தினகரன்.
இந்த நிலையில் இடைத்தேர்தல் ஆசை மு.க.அழகிரிக்கு வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அண்மையில் அழகிரியின் மகன் தயாநிதி, தினகரனைத் தொடர்பு கொண்டு, ''இடைத்தேர்தலில் திருவாரூரில் எங்க அப்பா நின்னா, உங்க கட்சி ஆதரிக்குமா''ன்னு கேட்டிருக்கார்.
இதனைக் கேட்டதும் கொஞ்சம் திடுக்கிட்ட தினகரன், ''யோசிச்சிச் சொல்றேன்னு'' சொன்னார். பின்னர் அவர் தரப்பில் இருந்து அழகிரி தரப்பைத் தொடர்பு கொண்டு, ''திருவாரூரில் அழகிரியை நாங்க ஆதரிச்சால், திருப்பரங்குன்றத்தில் எங்க அ.ம.மு.க. வேட்பாளரை அழகிரி ஆதரிப்பாரான்னு'' பதிலுக்கு கேட்டிருக்கிறார்கள்.
அழகிரியைப் பொறுத்தவரைக்கும் தன்னோட வெற்றியைவிட, ஸ்டாலின் ஜெயிச்சிடக் கூடாதுங்கிறதில்தான் ரொம்ப கவனமா இருக்கிறாராம்.
ஸ்டாலினும் இடைத்தேர்தலில் திமுகவின் பலத்தை காட்ட இரண்டு தொகுதிகளின் மாவட்டச் செயலாளர்கள், பக்கத்து மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் சீனியர்கள் உள்பட எல்லோருடனும் சீரியஸாக டிஸ்கஸ் பண்ணியிருக்கிறார். விரைவில் உடன்பிறப்புக்களும் தேர்தல் களத்தில் குதிக்க உள்ளனர்.