Skip to main content

சொத்து தகராறு; தந்தையைக் கொடூரமாகத் தாக்கிய மகன்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Son beats father due to property dispute

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு. 82 வயதான இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் தனது சொத்துக்களை இரு மகன்களுக்கும் சரி சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார்.

தனது மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களை பிரித்து தராமல் வைத்திருந்துள்ளார். அந்தச் சொத்தையும் பிரித்து தனக்குப் பங்கு தரவேண்டும் எனக் கூறி மூத்த மகன் மார்க்கபந்தீஸ்வரன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தந்தைக்கு தெரியாமல் தாயாரை அழைத்து சென்று தனது பெயரில் சொத்துக்களைப் பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது தெரியவந்து தனது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களைத் தனக்கு தெரியாமல் பத்திர பதிவு செய்து கொண்ட மூத்த மகனிடம் நியாயம் கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் 82 வயது முதியவர், தனது சொந்த தந்தை என்றும் பாராமல் கிரிக்கெட் மட்டையால் அடித்து கீழே தள்ளி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் மார்க்கபந்தீஸ்வரன். 

இதில் எலும்பு முறிவு மற்றும் பலத்த காயம் அடைந்த முதியவர் அப்பாவுவை அவரது மனைவி மற்றும் உறவினர்கள்  நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து முதியவர் அப்பாவு  நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மார்க்கபந்தீஸ்வரர் உள்ளிட்ட நான்கு பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்துக்காக வயதான தந்தை மீது மகன் கிரிக்கெட் மட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்