ஜல்லிக்கட்டு வழக்கில் முகிலன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கடந்த 2017- ஆம் ஆண்டு, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இன்று (04/11/2019) மதுரை மாவட்ட குற்றவியல் 4- வது நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக வேறொரு வழக்கில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகிலன் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். வழக்கு விசாரணை நடைபெற்றதையடுத்து, இந்த வழக்கை நவம்பர் 22- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது நீதிமன்றம் .
நீதிமன்ற வளாகத்தில் முழக்கமிட்ட முகிலன் "மத்திய அரசின் புதிய வேளாண்மை ஒப்பந்தத்தால் தமிழகம் சோமாலியாவாக மாறும். தமிழகத்தை கார்ப்ரேட் நிறுவனத்திற்கு தாரை வழங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும்." என்றார்.