குமாி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற 12 சிவன் கோவில்கள் உள்ளன. மகாசிவராத்திாியையொட்டி பக்தா்கள் ஒரே நாளில் இந்த 12 கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வருகின்றனா். நடந்து சென்றே ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபடுவது பிரதானமாக உள்ளது. இதற்காக கேரளா மற்றும் தமிழகத்தின் குமாி மாவட்டம் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இன்று மாலை இந்த சிவாலய ஓட்டம் நடந்தது.
சிவாலயம் ஓடும் பக்தா்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து காவி உடையணிந்து கொண்டு கையில் விசிறியுடன் "கோவிந்தா...கோபாலா" என்ற கோஷத்துடன் முன்சிறை திருமலை மகாதேவா் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கினாா்கள். தொடா்ந்து வாிசைப்படி திக்குறிச்சி மகா தேவா் கோயில், திற்பரப்பு மகாதேவா் கோயில், திருநந்திகரை சிவன் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவா் கோவில், திருபன்றிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவா் கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக் கோடு மகாதேவா் கோவில், திருவிதாங்கோடு மகாதேவா் கோவில், திருபன்றிகோடு மகாதேவா் கோவில் இறுதியாக நட்டாலம் சங்கரநாராயணா் கோவிலில் ஓட்டத்தை முடித்து கொள்கின்றனா்.
இதற்காக 112 கி.மீ தூரத்தை இரவும் பகலுமாக கடக்கின்றனா். இதேபோல் இருசக்கர வாகனம், காா், வேன் போன்ற வாகனங்களிலும் பக்தா்கள் செல்கின்றனா். சிவாலயம் ஓடும் பக்தா்களுக்கு வழி நெடுகிலும் மோா், சா்பத், பழம், கஞ்சி போன்ற உணவுகளை பொதுமக்கள் வழங்குகிறாா்கள்.