Skip to main content

திண்டுக்கல்லில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்! ஐ.பி.தொடங்கி வைத்தார்!!

Published on 04/02/2020 | Edited on 05/02/2020

மத்திய அரசு அறிவித்த குடிஉரிமை சட்டத்திற்கு எதிராகவும் அதனை திரும்பப் பெறக் கோரியும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.

 

 Signature campaign against Citizenship Amendment law in Dindigul! started up !!


அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நேற்று இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கியது. அதை தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சரும்,திமுக துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நகரிலுள்ள பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் திண்டுக்கல் எம்எல்ஏ செல்வி பாலபாரதி, மதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராகவன், திராவிட கழகத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் அன்பரசு, மற்றும்வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெகன், நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 Signature campaign against Citizenship Amendment law in Dindigul! started up !!


அதுபோல் ஒட்டன்சத்திரத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப் பினருமான சக்கரபாணி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் நகரில் உள்ள பலதரப்பட்ட வியாபாரிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். இதில் நகர செயலாளர் வெள்ளச்சாமி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து சக்கரபாணி பேசும்போது.... மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் தேசிய மக்கள்தொகை பதிவேடு தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகவே அமுலாக்கம் போது முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து இந்திய இந்தியரின் குடியுரிமை மீதும் கேள்விக்கு கேள்விக்குறியாகும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஏழைகளும் அடித்தட்டு மக்களும் சொந்த நாட்டில் அனாதைகளாக அகதிகளாகவும் வாக்குரிமை இல்லாதவர்களாகவும் ரேஷன் கார்டுகளை பறிகொடுத்து வரலாறு மாறும் நிலை ஏற்படும் என்ற சந்தேகம் உருவாகியுள்ளது எனவே இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டிய வேண்டிய சூழ் நிலை தற்போது உருவாகியுள்ளது என்று கூறினார்.

 

 Signature campaign against Citizenship Amendment law in Dindigul! started up !!

 

அதைத்தொடர்ந்து நத்தம் வத்தலக்குண்டு வேடசந்தூர் உள்பட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமைக்கு சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இதில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் உள்பட அனைத்து பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை கையெழுத்தும் மூலம் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்