திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் அருகிலுள்ள குமாரராஜா பேட்டை ஊராட்சியில் காலனி பகுதியில் வசித்து வரும் இளைஞர்களான தமிழரசன், பிரகாஷ், அரவிந்தன், மற்றும் பிரகாஷின் தம்பி அஜித், தமிழரசனின் காதலி ஜனனி, அவரது அக்கா அருணா ஆகியோரிடத்தில் டெல்லியில் இருந்து வருகை தந்த 15க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறையினர் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் 10 பேர் முன்னிலையில் பாதுகாப்புடன், வங்கி அதிகாரிகள் 5 பேர் முன்னிலையில் 4 இளைஞர்கள் இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் இந்த நான்கு இளைஞர் இடத்திலும் மற்றும் அவர்களது காதலிகள் ஆகியோரிடத்திலும் உங்களது வங்கி கணக்குகளில் ரூபாய் 7.59 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளது. மேலும் வடமாநில குழுக்களுக்கும் உங்களுடன் சேர்த்து வங்கியில் பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இந்த பணம் அனுப்பியது யார்? இந்த படம் உங்களுக்கு எதற்காக அனுப்பப்பட்டது? இந்த பணம் உங்களுக்கு கொடுத்து யாருக்கு கொடுக்க கூறினார்கள்? இந்த பணம் எதற்காக உங்களுக்கு கர்நாடக மாநிலம், ஆந்திர மாநிலம் தமிழகத்தில் எல்லையில் உள்ள உங்களுக்கு எதற்காக அனுப்பப்பட்டது? அரசியல் தொடர்பு எதுவும் இருக்கிறதா என்று பல்வேறு விதமான கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த இளைஞர் இடத்தில் முன்வைத்தனர்
அமலாக்கத் துறையின் கேள்விகளுக்கு இந்த இளைஞர்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்து வந்து உள்ளனர். தொடர்ந்து நடைபெற்ற இந்த விசாரணை வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் மாலை 7 மணி வரை அவர்கள் வீடுகளில் நடைபெற்றது. 11 மணி நேர விசாரணைக்கு பிறகு மேற்கண்ட இளைஞர்கள் வீடுகளில் விசாரணை மற்றும் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள பள்ளிப்பட்டு காவல் நிலையத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த இளைஞர்கள் 4- பேரை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
காவல்துறையினரின் கேள்விக்கு சரியாக பதில் அளிக்காததால் இவர்களை கைது செய்து டெல்லி மற்றும் பெங்களூர் போன்ற அமலாக்கத்துறை அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த இளைஞர்கள் மீது அரியானா காவல் நிலையத்தில் வங்கி பரிவர்த்தனை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது போன்ற விவரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள விசாரணைக்காக இவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர் என்று அமலாக்கத்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.