Skip to main content

 செந்தில்பாலாஜியின் கேள்வியும் எஸ்கேப் ஆன அமைச்சரும் ! 

Published on 26/05/2019 | Edited on 26/05/2019

 


கரூர் அரசியலில் தான் உச்சக்கட்ட அனைத்து கருத்து மோதல்களும், தேர்தல் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே வந்தது. அதுவும் அதிமுகவில் இருந்து அமமுக சென்று பின்பு அங்கிருந்து தி.மு.கவிற்கு வந்து முக்கிய பொறுப்பு வாங்கிய செந்தில்பாலாஜியை அரசியலில் வெளியேற்றுவதற்கு அனைத்து கட்சியினரும் இணைந்து செயல்பட்டனர். ஆனால் அத்தனை அரசியல்ரீதியான பிரச்சனைகளுக்கும் வாங்கிய ஓட்டுகள் மூலம் பதில் அளித்தார் செந்தில்பாலாஜி 

 

s

 

கரூர் அரவக்குறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, பாத்திரிகையாளர்களிடம் பேசியபோது,   அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே, இந்த முறை தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட வாக்காளர்கள் முடிவு செய்து விட்டனர். 

 

தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. இதையும் தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். அரவக்குறிச்சி தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். தேர்தலில் வெற்றி, தோல்வியை முடிவு செய்வது வாக்காளர்கள்தான்.

 

ஆனால், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  நான் தேர்தலில் டிபாசிட் பெற்று விட்டால், அரசியலை விட்டு விலகி விடுவதாகவும், பதவியை ராஜினாமா செய்து விடுவதாகவும் கூறினார். அவர் விரைவில் பதவியை ராஜினாமா செய்வார் என நினைக்கிறேன். பத்திரிகையாளர்களே கேட்டு சொல்லுங்கள். அப்படி செய்தால், கரூர் சட்டசபை தொகுதிக்கு விரைவில் தேர்தல் வரும். அதிலும், தி.மு.க.,வே வெற்றி பெறும் என்று பொரிந்து தள்ளினார். 

 

செந்தில்பாலாஜி எழுப்பிய இந்த அதிரடி கேள்விக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் கூறுகையில், ''செந்தில் பாலாஜி , அ.ம.மு.க.,வில் இருந்தபோது, எம்.பி., - எம்.எல்.ஏ., தேர்தலில் நின்று டிபாசிட் வாங்கினால், நான் அரசியலில் இருந்து விலகுவேன் என்றேன். ஆனால், அ.ம.மு.க.,வில் இருந்தால் வெற்றி பெற முடியாது என, தி.மு.க.,வுக்கு சென்று வெற்றி பெற்றுள்ளார். எனவே, ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அ.ம.மு.க., சார்பில், அவர் நின்றிருந்தால் டிபாசிட் பெற்றிருக்க முடியுமா,” என்று எதிர் கேள்விட்டு எஸ்கேப் ஆனார்.! 

சார்ந்த செய்திகள்