Skip to main content

மூடப்பட்ட குடோனில் நடக்கும் ரகசிய டீலிங்! களத்தில் இறங்கிய காவல்துறை!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

Secret Dealing in a Closed Goodown

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம், ஆலடி ரோட்டில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள செயல்படாத செராமிக் கம்பெனி குடோனின் பின்புறம் ஒரு மினி லாரி தார்ப்பாயால் மூடப்பட்டு மர்மமான முறையில் உள்ளதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து இன்று அதிகாலை அங்குச் சென்ற குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் மற்றும் விருத்தாசலம் காவல்துறையினர் லாரியைச் சோதனை செய்தனர். அப்போது, அந்த லாரியில் அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

 

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குடோனை திறந்து பார்த்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர். அந்த குடோனில் சட்டவிரோதமாக ரேஷன் பொருட்களைக் கடத்தி வந்து, பாலிஷ் செய்து வேறு சாக்குப் பையில் அடைத்து இட்லி அரிசி எனப் பெயரிடப்பட்டு அதனைக் கடத்திச் சென்று வெளியூரில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அந்த குடோனில் இருந்த 156 மூட்டை ரேஷன் அரிசி, 58 மூட்டை ரேஷன் கோதுமை மற்றும் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தின் பெயர் அச்சடிக்கப்பட்ட இட்லி அரிசி பாக்கெட்டுகள் அடங்கிய கோணி சாக்குகள், மற்றும் மூட்டைகளை தைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் இருந்தது. அவற்றை எல்லாம் பறிமுதல் செய்த போலீசார், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறைக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து வந்து ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டவையா? அல்லது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனிலிருந்து கொண்டுவரப்பட்டவையா?  என விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Secret Dealing in a Closed Goodown

 

அதேசமயம் கடத்தல் பட்டாசு இருந்த மினி லாரியை கைப்பற்றி அதில் உள்ள முகவரி மூலம் லாரி டிரைவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நேற்று முன்தினம், விருத்தாசலம் பாலக்கரை இறக்கத்தில் உள்ள ஒரு தனியார் பட்டாசு கடையில் அளவுக்கு அதிகமாகப் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாகக் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திகணேசனுக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்குச் சென்று சோதனை மேற்கொண்டபோது, அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக வைக்கப்பட்டிருந்ததாக சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

Secret Dealing in a Closed Goodown

 

அங்குப் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளைச் சிவகாசிக்கு அனுப்பும்படியும் உத்தரவிட்டார். அதன்படி மினி லாரிகளில் ஏற்றி சிவகாசிக்கு எடுத்துச் சென்ற பட்டாசு லாரி இதுவா என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

நேற்றுமுன்தினம் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில், அளவுக்கு அதிகமாக ஒரு கடையில் பட்டாசுகள் வைத்திருந்ததால் தீ விபத்து ஏற்பட்டு 7 பேர் உயிர்ப் பலியாகினர். அச்சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.