Published on 04/09/2022 | Edited on 04/09/2022

அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் இந்த உயர் கல்வித் திட்டத்தில் பயன் பெறுவார்கள். இதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில் தற்போது இந்த திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மாதிரி பள்ளிகள் மற்றும் சீர்மிகு பள்ளிகள் துவக்க விழாவில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து தமிழக முதல்வர் இத்திட்டத்தினை துவக்க உள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பலனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.