Published on 01/12/2023 | Edited on 01/12/2023

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியம் கம்பியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார் மற்றும் மணல் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்கள் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்த விபத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாகக் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.