Skip to main content

சேலத்தில் ஆவின் பால் முகவர் மனைவியுடன் தற்கொலை!

Published on 10/12/2019 | Edited on 10/12/2019

சேலத்தில் கடன் தொல்லையால் மனம் உடைந்த ஆவின் பால் முகவர், மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


சேலம் சூரமங்கலம் ரெட்டிப்பட்டி பிரதான சாலையைச் சேர்ந்தவர் மணி (58). ஆவின் பால் முகவர். இவருடைய மனைவி கண்மணி (48). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. 


மணி, வீட்டிலேயே ஆவின் பால் விற்பனை செய்து வந்தார். செவ்வாய்க்கிழமை (டிச. 10) காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. வீட்டு முன்பு இறக்கி வைக்கப்பட்ட ஆவின் பால் பிளாஸ்டிக் 'டப்'புகள் அப்படியே எடுக்கப்படாமல் இருந்தன. 

salem district aavin milk agent incident police investigation


பால் வாங்க வந்த வாடிக்கையாளர்கள், கதவை தட்டினர். உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்காததால், அந்த வழியாக வந்த மணியின் தம்பி பன்னீர்செல்வத்திடம் கூறினர். அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, வீட்டுக்குள் கணவன் ஒரு கயிறிலும், மனைவி சேலையாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.


இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல்துறையினர், அங்கு விரைந்து வந்து சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர். மகள்களின் திருமமணத்திற்காக அவர் பல இடங்களில் கடன் வங்கியிருந்தார். அந்தக் கடன் தொகையை அவரால் குறித்த காலத்திற்குள் திருப்பிச் செலுத்த இயலாததால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். அதனால் அவர்கள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. 


சடலங்களை உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இருவரின் சடலங்களையும் பார்த்து மகள்கள், உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்