ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில்,
இன்று தற்பொழுது வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஊரக உள்ளாட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தனித்தனியே தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஊரக உள்ளாட்சி தேர்தல் முதலில் இருக்கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. முதல்கட்டத்தில் 76 சதவிகித வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77 சதவிகித வாக்குகளும் பதிவான நிலையில் தற்போது வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இந்த தேர்தலில் வாக்கு எண்ணப்படுவதனால் வாக்கு எண்ணும் மையங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.