விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்தில் பேச அனுமதிக்கவில்லை என வாயில் பூட்டு போட்டுக்கொண்டபடி விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை முன்வைத்தனர்.
இந்நிலையில் அரசின் குறைகளை எடுத்துசொல்லுவதற்கு விவசாயிகளை பேச அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்ற குற்ற சாட்டு தொடர்ந்து இருந்து வந்தது. வழக்கம்போல அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் விவசாயிகள் பேசுவதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து காலம் தாழ்த்தியதால், விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வாயில் சங்கிலி பூட்டு போட்டும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து மாவட்ட வருவாய் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறைத்தீர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குறைத்தீர் கூட்டத்தில் அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பேசும் விவசாயிகள் பேசுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கப்படுவது கிடையாது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.