
சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கர்ணாஸை கைது செய்ய நெல்லை மாவட்ட போலீசார் தீவிரம்: 01-09-17 அன்று நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவிற்கு மரியாதை செலுத்த வந்த போது தமிழ்நாடு தேவர் பேரவை அமைப்பினரோடு ஏற்பட்ட மோதல் சம்பவம் ஏற்பட்டது. இதுத்தொடர்பாக அன்று புளியங்குடி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும் செவலில் 2017ம் ஆண்டு பூலித்தேவனின் 302வது பிறந்த நாள் விழாவில் தமிழ்நாடு தேவர் பேரவை சேர்ந்தவருக்கும், முக்குலத்தோர்புலிப்படை சேர்ந்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கருணாஸ் மீது புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இந்நிலையில் புளியங்குடி டி.எஸ்.பி.ஜெயகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் கருணாஸை கைது செய்ய சென்னை விரைந்துள்ளது.
தற்போது கருணாஸ் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் முன் ஜாமின் கேட்டு மனு செய்துள்ளார் என்பதும், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.