Skip to main content

ராமேஸ்வரம் கோவில் நிதி கையாடல் வழக்கு!- சிபிசிஐடிக்கு மாற்றம்!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

ராமேஸ்வரம் கோவில் நிதி கையாடல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மறவர் தெருவைச் சேர்ந்த சிவன் அருள் குமரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் ‘ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கணினி ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்தேன். என் மீது கோவில் நிதி  ரூ.73 லட்சத்து 4 ஆயிரத்து 618 ரூபாயைக்  கையாடல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்  கைது செய்யப்பட்டுள்ளேன்.

rameshwaram temple fund scam issues cbcid transfer court order


நான் இங்கு வெறும் கணினி இயக்குனராக உள்ளேன். மேலும் நான் தற்காலிக ஊழியராக மட்டுமே பணி புரிந்து வருகிறேன். என் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. வேறு யாரையோ காப்பாற்றும் நோக்கில் என்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டு 24 நாட்களாகி உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் தாக்கல் செய்த எனது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்.’என்று முறையிட்டிருந்தார்.  

 


இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.


 

சார்ந்த செய்திகள்