Skip to main content

ரஜினிகாந்த் செய்த உதவி! விஜயலட்சுமி வெளியிட்ட 2வது வீடியோ

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

 

நடிகை விஜயலட்சுமி, தான் பண கஷ்டத்தில் இருப்பதாகவும் ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருப்பதாகவும் பேசி, ரஜினிகாந்த் எனக்கு உதவ வேண்டும் என்றும் கூறி வீடியோ வெளியிட்டார்.

 

v

 

தற்போது அவர் வெளியிட்டுள்ள 2வது வீடியோவில்,   “வீடியோவில் எனது கஷ்டங்களை பகிர்ந்து ரஜினியிடம் ஒரு முறை பேச வேண்டும் என்று கூறினேன். இதை பார்த்து ரஜினிகாந்த் என்னை போனில் தொடர்பு கொண்டார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அன்போடு எனது பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுத்ததுடன், நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்.   அவர் சிறந்த மனிதர். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவருடைய எண்ணத்தை மதிக்கிறேன். அவர் மீது நான் கொண்ட மரியாதை நூறு மடங்கு அதிகரித்துவிட்டது. இப்படி ஒரு நல்ல மனிதர்தான் நமக்கு தலைவராக இருக்க வேண்டும். என்னுடைய கஷ்டங்களை கேட்டு உதவி செய்தார்.

 

ரஜினிகாந்த் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும். ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய எளிமை அவரிடம் அதிகமாகவே இருக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்