ஒரு பொய்யை தொடர்ந்தது சொன்னால் அது உண்மையாகும் என்பதற்கு உதாரணம் போல தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசிவருகிறார். எட்டு வழிச்சாலையால் சென்னை – சேலம் இடையிலான பணய தூரம் 70கிமீ தூரம் குறையும் எனக்கூறிவருகிறார். இவர்கள் சொல்லும் 277கிமீ தூரம் என்பது சேலம் முதல் படப்பை வரை மட்டுமே. படப்பை முதல் சென்னைக்கு 43கிமீ தூரம் உள்ளதை மறைத்து தொடர்ந்து பொய் கூறி வருகிறார் முதலமைச்சர் என எடப்பாடியை கண்டித்துள்ளது சேலம் எட்டுவழி சாலை எதிர்ப்பு இயக்கம்
உண்மையில் பயண நேரம் 10கிமீ மட்டுமே குறையும் என்பதே உண்மை. அதாவது தற்போது சென்னை-சேலம் இடையிலான பயண தூரம் 330கிமீ தூரம். புதியதாக அமைக்கப்படவுள்ள 8 வழிச்சாலை என்பது திட்டமிட்டது சேலம் டூ படப்பை வரை 277 கி.மீ. படப்பை டூ சென்னை வரை + 43கி.மீ. 277+43=320கிமீ. 330-320=10கிமீ மட்டுமே குறையும் என்பது உண்மை.
இந்த திட்டத்துக்கு 93% விவசாயிகள் ஆதரவு தருகிறார்கள் என்பதும் பொய். 99% விவசாயிகள் எதிர்ப்பு என்பதே உண்மை. அத்தோடு தேர்தலுக்கு முன்பு உயர் நீதிமன்ற தீர்ப்பை அம்பலப்படுத்துவோம் என்று கூறிவிட்டு தற்பொழுது அதை காற்றில் பறக்க விட்டு விட்டு இது சேலத்திற்கான சாலை இல்லை கோவைக்கான சாலை என்கிறார். இதுவும் பொய்.
இப்படி பொய்யை மட்டுமே பேசும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் கண்டனத்தை பதிவு செய்கிறது. தொடர்ந்து பொய்களாக பேசிவரும் முதலமைச்சரை கண்டித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.