Skip to main content

 ரஜினியின் இரண்டு நண்பர்களும் ஒரே தொகுதியில் போட்டி– ரஜினி ஆதரவு யாருக்கு?

Published on 03/08/2019 | Edited on 03/08/2019

 


வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் நண்பர்களில் ஒருவரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். ரஜினியின் மற்றொரு நண்பரான திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். ரஜினியின் இரண்டு நண்பர்களும், ஒரே தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

 

r


வேலூர் மாவட்டத்தில், தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாணியம்பாடி, குடியாத்தம், வேலூர் மாநகர தொகுதிகளில் மற்ற பகுதிகளை விட ரஜினியின் மக்கள் மன்றத்திற்கு பலம் அதிகம். இதனால் ரஜினியின் ஆதரவை பெற ஏ.சி.சண்முகம், அவரை நேரில் சந்தித்து கடந்த மார்ச் மாதமே ஆதரவு கேட்டார். அவர் என்ன பதில் சொன்னார் என்பது வெளியாகவில்லை, ரஜினியும் வெளிப்படையாக தகவல் சொல்லவில்லை.


ஆனால், வேலூர் வந்த ஏ.சி.சண்முகம், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் சிலரை சந்தித்து, நான் தலைவர் ரஜினியின் ரசிகன், அவரின் நண்பன். எனக்கு ஆதரவு தாருங்கள் எனக்கேட்டார், அவர்களோ தலைவர் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை என பின்வாங்கினார்கள். இருந்தும் சிலரிடம் பண ஆசைக்காட்டி கீழ்மட்ட நிர்வாகிகளை தனக்கு ஆதரவாக மாற்றினார்.


இருந்தும் ரஜினியின் மக்கள் மன்றம் வெளிப்படையாக தனக்கு ஆதரவாக செயல்படவில்லை என்கிற வருத்தம் ஏ.சி.சண்முகத்துக்கு உள்ளது. இதுப்பற்றி பேசும் பாஜக பிரமுகர்கள், ரஜினி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் அவரின் ஆதரவு ஏ.சி.சண்முகத்துக்கு தான். காரணம் சண்முகம் ரஜினியின் நண்பர் மட்டுமல்ல, பாஜக ஆள். ரஜினியும் மோடியின் நண்பர். அதனால் அந்த ஓட்டு எங்களுக்கு தான் கிடைக்கும் என்கிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்