Published on 26/06/2019 | Edited on 26/06/2019
சென்னையில் புழல் ஏரி வேகமாக வறண்டு கொண்டிருப்பது குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் சென்னையில் உள்ள நான்கு நீர்நிலைகளில் செயற்கைக்கோள் படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
சென்னையிலுள்ள புழல் மற்றும் சோழபுரம் ஆகிய ஏரிகளில் 4380 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்க முடியும். சென்னையின் தண்ணீர்த் தேவைக்கு இந்த இருஏரிகளும் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் மழை பொய்த்து தற்போது தண்ணீருக்கான தேவை அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த இரண்டு ஏரிகளும் சுத்தமாக வறண்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக புழல் ஏரி உச்சகட்ட வறட்சி நிலையை எட்டிவிட்டது. இது தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.