Skip to main content

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் களப் பயணம்!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

Public School Teachers field work

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை திருநாவலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கே.இளங்கோதை தலைமையில், அப்பள்ளி ஆசிரியர்கள் சுற்றியுள்ள திருநாவலூர், கெடிலம், மாரனோடை, மேட்டத்தூர், பெரும்பட்டு, சேந்தமங்கலம், மைலங்குப்பம், வைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாகக் களப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்தக் கிராமங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ளவர்களிடம், அரசுப்பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தியும், தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க கூடிய சலுகைகள் விலையில்லா பொருட்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் பற்றியும் பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 


அதேபோல் கரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடந்துவருகிறது. கைபேசி, இணையம் வசதியில்லாத மாணவர்களுக்கு பயனுள்ள வகையாக தமிழக அரசு ‘கல்வி தொலைக்காட்சி’ எனும் தொலைக்காட்சியை துவங்கி அதன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்திவருகிறது. இந்த நிகழ்ச்சிகள் பற்றியும், கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பற்றியும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். மாணவர்களுக்கு தேவையான கற்றல் கையேடுகள், கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் போன்றவற்றையும் வழங்கினார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்