Skip to main content

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எதிரொலி... மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தேகங்களை நிறைவேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்

Published on 23/05/2020 | Edited on 23/05/2020
 A public school teacher who visits students' homes and clear suspicions

 

கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் முதல் நாளில் தொடங்கும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தவுடன் பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதனால் ஜூன் 15 ந் தேதி முதல் தேர்வுகள் தொடங்கும் என்று அறிவித்தார்.


ஆனால் பள்ளி மாணவர்கள் – ஆசிரியர்கள் குறைந்த நாட்களாவது இணைந்து கலந்துரையாடிய பிறகு தேர்வுகள் நடத்தினால் மாணவர்கள் நல்ல முறையில் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும் என்ற கருத்து பலதரப்பில் இருந்தும் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது பள்ளி திறந்த பிறகு சில வாரங்கள் பள்ளி செயல்பட்ட பிறகு தேர்வுகள் நடத்தலாம் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அரசு அதற்கு இசையவில்லை.

 

 

 A public school teacher who visits students' homes and clear suspicions

 

இந்தநிலையில் தான் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக உள்ள வடகாடு தமிழரசன் தங்கள் பள்ளி மாணவர்கள் வீடுகளுக்கு உணவுப் பொருட்களை நிவாரணமாக வழங்கியதுடன் ஒவ்வொரு மாணவ, மாணவி வீட்டிற்கும் சென்று அவர்களின் உடல்நலன் பற்றி விசாரித்து வந்தவர், தற்போது 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கான பாடத்தில் உள்ள சந்தேகங்களை உடனுக்குடன் சரி செய்து வருகிறார்.

அரசுப் பள்ளி ஆசிரியர் வடகாடு தமிழரசனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்