Skip to main content

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவில் வெளிமாநில, மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி இல்லை... கறாராக அறிவித்த நாகை மாவட்ட நிர்வாகம்...

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

velankanni

 

 

நீண்ட நாட்களுக்கு பிறகு நாடு முழுவதும் சில கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் வழிபாடு செய்துவருகின்றனர். ஆனால் வேளாங்கண்ணி பேராலயமும், நாகூர் தர்காவும் இன்னும் திறக்கப்படவில்லை என பக்தர்கள் வேதனைபடுகின்றனர்.

 

உலகையே அச்சுறுத்திய கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவுவதை தடுப்பதற்காக அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவுபடி நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய பேராலயமும், நாகூர் தர்காவும் மூடப்பட்டன.

 

இந்த நிலையில் செப்டம்பர்ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை, சில வழிபாட்டு நெறிமுறைகளுடன் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் வழிபாட்டுத்தளங்கள் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட்டுவருகின்றனர். நாகை மாவட்டத்திலும் பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வணங்கி வருகின்றனர். ஆனால் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயமும், நாகூர் தர்காவும் மட்டும் அனுமதி வரவில்லை என திறக்கப்படவில்லை. சில நெறிமுறைகளுடன் பேராலயமும், நாகூர் தர்காவும் திறக்கப்படும் என்கிற ஆவலுடன் பக்தர்கள் காலை முதலே அங்கு வரத்துவங்கினர். ஆனால் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்தவித அனுமதியும் வரவில்லை என வழிகள் மூடப்பட்டு, தடுத்து திருப்பி அனுப்பிவருகின்றனர்.

 

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி பக்தர்கள் இல்லாமலேயே கொடியேற்றத்துடன் துவங்கிவிட்டது, வரும் எட்டாம் தேதி வரை விழா நடக்கவிருக்கிறது. பேராலயத்தை திறந்தால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள், அதிக அளவில் பக்தர்கள் வந்தால் எவ்வாறு அதை எதிர்கொள்வது என்பது குறித்து கலந்து ஆலோசித்த பிறகே ஆலயங்களைத் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் கறாராக தெரிவித்துவிட்டது.

 

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் கூறுகையில், "வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா நடைபெறுகிறது. அதனால் வரும் எட்டாம் தேதி வரை வெளி மாநிலம் மற்றும் மாவட்ட சேர்ந்த பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வேளாங்கண்ணியை சுற்றியுள்ள அனைத்து விடுதிகளும் வரும் எட்டாம் தேதி வரை செயல்படக்கூடாது. கடற்கரை பகுதிக்கு யாரும் செல்ல அனுமதி இல்லை. வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட உள்ளூர் வாசிகள் மட்டும் உரிய ஆவணங்களை காட்டி செல்லலாம் காலை 8 மணி முதல் மாலை ஐந்து முப்பது வரை மட்டுமே முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். வரும் 7ஆம் தேதி நடைபெறும் தேர்பவனிக்கும், எட்டாம் தேதி நடைபெறும் கொடியிறக்க விழா நிகழ்ச்சியிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. அன்றைய தினம் பேராலய நிர்வாகத்தினரும், மதபோதகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்