தேமுதிக, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை ஒன்றாக அ.தி.மு.கவோடு கூட்டணியில் இருந்தது. தற்போது நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கூட்டணி நீடிக்கும் என்ற நிலையில், 3 முறை அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தீர்வு எட்டப்படாததால் தே.மு.தி.க தலைமை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தே.மு.தி.க தலைமை அலுவகம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் தே.மு.தி.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதே போல புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம் உட்பட மாவட்டத்தின் பல ஊர்களிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாடி, அதிமுகவுக்கு எதிராகவும் தே.மு.தி.க முடிவுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து தே.மு.தி.க தொண்டர்கள் கூறும்போது, “2011 இல் எங்களை வைத்து அதிமுக ஆட்சிக்கு வந்தது. அதே போல 2021இல் அதிமுக எங்களால் ஆட்சியை இழக்கப் போகிறது” என்றனர்.