Skip to main content

ரெம்டெசிவர் மருந்து வாங்க குவிந்த பொதுமக்கள்... ஒரு நாளுக்கு 50 பேருக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிப்பு...!

Published on 10/05/2021 | Edited on 10/05/2021

 

The public gathered to buy Remdeciver medicine ... Announcement that it will be given only to 50 people a day

 

தமிழகத்தில் கரோனா தொற்று 2ஆம் அலையின் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும், உயிர் காக்கும் மருந்தான ரெம்டிசிவர் மருந்தை தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பெறுவதற்கான நடைமுறைகளை வகுத்துவருகிறது. 

 

மருந்து வாங்குவதற்கான நடைமுறைகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருத்துவச் சீட்டு, நோயாளிக்கான ஆதார் அட்டை, மருந்து வாங்க வந்திருக்கும் நபருடைய ஆதார் அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது. நோயாளிக்கு ஏற்ப மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

The public gathered to buy Remdeciver medicine ... Announcement that it will be given only to 50 people a day

 

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று (10.05.2021) ரெம்டிசிவர் மருந்து வாங்குவதற்காக அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் ஒருநாளில் 50 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வரிசையில் நின்ற மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் எங்களுக்குத் தேதி குறிப்பிட்டுத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

 

மேலும், விற்பனை செய்யும் இடத்தையும் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் அர்ஷீயா பேகம், மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், 50 பேருக்கு மட்டும் வழங்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து 50 பேர் மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்