தேனி மாவட்டதில் உள்ள கம்பம் அருகே இருக்கும் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டண உயர்வை உயர்த்தியதை கண்டித்து கம்பம், சுருளிப்பட்டி, கேகே பட்டி, என்.டி.பட்டி, லோயர்கேம்ப், கூடலூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேனி மாவட்ட திமுக பொருப்பாளருமான ராமகிருஷ்ணன் தலைமையில் கம்பத்தில் இருந்து நடை பயணமாக சுருளி அருவி நோக்கி சென்றார். அதே போல், ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் பெரியகுளம் முன்னாள் சிபிஎம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் லாசர் தலைமையிலும் கூடலூரில் இருந்து ஒரு பிரிவினர் சுருளி அருவி நோக்கி நடைபயணமாக சென்றனர். அவர்களுடன் அனைத்து எதிர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சுருளியை நோக்கிசென்றனர். அதனால் செக்போஸ்டு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், வனத்துறையினரும் தடுப்பு வேலி போட்டு தடுத்தனர். அதையும் மீறி நடந்தே சுருளி நீர்வீழ்ச்சி வரை சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைகண்டு போலீசார் பதறிஅடித்து வந்து கட்சிகாரர்களையும் பொதுமக்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி
வைத்தனர்.
சுற்றுலா தளமான சுருளி அருவியில் நுழைவுக் கட்டணமாக குழந்தைகளுக்கு 20ரூபாயும், பெரியவர்களுக்கு 30ரூபாயும் வீடியோ கேமரா கொண்டு செல்பவர் களுக்கு 300ரூபாய் வரை கட்டணம் வசூலித்து வருகிறார்கள். அதை கண்டு டென்ஷன் அடைந்த கம்பம் பள்ளத்தாக்கு அனைத்து அரசியல் கட்சிகள் ஜனநாயக அமைப்புகள், தொழிலாளர்கள் அமைப்புகள் ஆகியோர் கலந்து கொண்டு சுருளி அருவி நடைபயணம் சென்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். குல தெய்வ வழிபாட, குடமுழுக்கு ஊர் முக்கிய கோயில்கள் திருவிழாக்கள் கொண்டாடுவதற்கு முன் இங்குள்ள கோயில்களில் வழிபாட்டு தீர்த்தம் எடுத்துச் செல்வது பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதுபோல் ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக சுருளி அருவியில் இறந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் ஆத்மசாந்தி வழிபாடு, விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். மேலும் ஆடி, தை அமாவாசை ஐயப்பன் கோவில், முருகன் கோவில், மாலை போடுவதற்கு என முக்கிய நாட்களில் வருடம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் புண்ணிய ஸ்தலமாக உள்ளது அப்படி இருக்கும் போது வனத்துறை கட்டண உயர்வை ரத்து செய்து எப்போதும் உள்ளது போல் குறைந்த கட்டணம் வசூலிக்கவேண்டும் அல்லது கட்டணத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று நடைபயணத்தில் வந்த மக்கள் தங்களின் மனக்குமுறல்களை வலியுறுத்தினார்கள்.