Skip to main content

பொன்முடி பேச்சு; மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published on 11/04/2025 | Edited on 11/04/2025
NN

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி விலைமாதர்கள் பற்றிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாக ஆபாசமாக பேசியது தொடர்பாக அவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுக் கண்டிக்கப்பட்டு வந்தது.

திமுகவிலேயே இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். திமுக நாடாளுமன்ற குழுத்  தலைவர் கனிமொழி பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து பேசி பொன்முடி சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில் இந்த விவகாரமும் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த சர்ச்சை பேச்சின் எதிரொலியாக திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து பொன்முடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் திமுகவின் துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

அதேபோல் அண்மையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய பேச்சுக்கு பொன்முடி நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்