Skip to main content

மின்னணு குடும்ப அட்டையில் பதிவுசெய்த பிறகே பொங்கல் பரிசு - தமிழக அரசு

Published on 05/01/2019 | Edited on 05/01/2019

 

t

 

பொங்கல் பரிசு மற்றும் ரூ.1,000 இரண்டையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒன்றாக, ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தெருவாரியாக குடும்ப அட்டை எண்ணிக்கையில் பரிசை தர வேண்டும் என்றும், அதேசமயம் பொங்கல் பரிசு விநியோக அட்டவணையை தயாரித்து ரேஷன் கடைகளில் விளம்பரம் செய்யவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

 

 

மேலும், முடிந்தவரை ரூ. 1,000 என்பதை இரண்டு ரூ.500 தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும், எக்காரணம் கொண்டும் பணத்தை உறையில் அடைத்து தரக்கூடாது என்று தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. குறிப்பாக ரூ. 1,000 மற்றும் பரிசுத் தொகுப்பை மின்னணு குடும்ப அட்டையில் பதிவுசெய்த பிறகே வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்