Skip to main content

சிறை கைதி மரணம் - புதுச்சேரியில் உறவினர்கள் போராட்டம்! 

Published on 28/11/2018 | Edited on 28/11/2018
m


புதுச்சேரியை அடுத்த ரெட்டிச்சாவடி,  கரிக்கன் நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவரை கடந்த 23-ம் தேதியன்று இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் பாகூர் போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

 

இந்நிலையில் ஜெயமூர்த்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிறைக்காவலர்கள் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயமூர்த்தி இன்று மாலை  உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ஜெயமூர்த்தியின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.


அப்போது போலீசார் அடித்து உதைத்ததால் தான் ஜெயமூர்த்தி உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பிரேத பரிசோதனைக்கு ஜெயமூர்த்தியின் உடலை எடுத்து செல்ல விடாமல் உறவினர்கள் தடுத்தனர். சம்பந்தப்பட்ட காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு பிரேத பரிசோதனைக்காக ஜெயமூர்த்தியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. 
 

 

சார்ந்த செய்திகள்