Published on 20/02/2019 | Edited on 20/02/2019

அதிமுக பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்ததை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், “ஸ்டாலின் திணறி திண்ணையில் உட்காரும் வகையில் அதிமுக கூட்டணி உருவாகியுள்ளது. நாடாளுமன்றம் என்ற தர்மயுத்தத்தில் திமுக காணாமல் போய்விடும். தேர்தல் களம், தேர்தல் போர் தொடங்கிவிட்டது. கடந்த தேர்தலில் இழந்த 2 தொகுதிகளான தருமபுரி, குமரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்று சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவையில் நடைபெற்ற அம்மாபேரவை மண்டல கூட்டத்தில் பேசினார்.