சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கபடாததால் தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்கமாட்டோம் என கூறிவருகின்றன. இதனால் சேப்பாக்கம் மைதானம் மற்றும் வீர்கள் தங்கும் விடுதிகளில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை-கொல்கத்தா இடையேயான போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது.
மேலும் கிரிக்கெட் வீர்கள் இன்று மாலை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கபடாததால் ஐபிஎல் போட்டிகளை தமிழத்தில் நடத்த அனுமதிக்கமாட்டோம் மீறி நடத்தினால் மைதானம் மற்றும் கிரிக்கெட் வீர்கள் தங்கியிருக்கும் உணவு விடுதி முற்றுகையிடப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மற்றும் பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனால் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் கிரிக்கெட் வீர்கள் தங்கியுள்ள அடையாறு விடுதி போன்றவைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள் மைதானத்தை அடைய சிறப்பு வழி அமைக்கப்பட்டுள்ளது மற்றும் மைதானத்தின் சுற்றுசுவர்கள் பிரத்தியேக தடுப்புகள் மூலம் உயர்த்தப்பட்டள்ளது. மேலும் இன்று மைதானத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உரிய அடையாள அட்டை உள்ளவர்கள், ஊழியர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.