Skip to main content

மாணவிகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுரை

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
Do not play in the lives of the students


விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இங்கு உள்ள ஆட்டோக்களில் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் இளைஞர்களுடன் அமர்ந்திருக்கின்றனர். இவர்கள் காதல் செய்வதற்காக தங்களது ஆட்டோவில் அவர்களை அமர வைத்து அதற்கான கட்டணத்தை பெறுகிறார்களாம். மேலும் காதலர்களுக்குள் ஏதேனும் பிரச்சனை வந்தால் மிரட்டி சிலர் பணம் பறிப்பதும் நடக்கிறது. சில மாணவிகளை சில ஆட்டோ டிரைவர்கள் தங்களுக்கு சாதகமாக காம இச்சைக்கு பயன்படுத்திக்கொள்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் சென்றுள்ளது.
 

உடனடியாக அனைத்து ஆட்டோ டிரைவர்களையும் அழைத்த காவல்துறையினர், போக்குவரத்து விதிமுறை, பொதுமக்களிடம் அணுகுவது எப்படி, பொதுமக்களுக்கு நண்பனாக இருப்பது எப்படி என்று ஆலோசனை வழங்கினர். மேலும் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் காதல் ஜோடிகளை அமர வைப்பதாகவும், அவர்களில் சிலர் பள்ளி, கல்லூரி மாணவிகள் எனவும் கூறப்படுகிறது. மாணவிகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். இதுபோன்ற செயல்களை தவிர்த்திட வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். மேலும் ஆட்டோ நிறுத்துவதை வேறு இடத்திற்கு மாற்றவும் ஆலோசனை நடந்தி வருகிறார்கள். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்