Skip to main content

"எனக்கும் கணக்குக்கும் ரொம்ப தூரம்ங்க...பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட காவல் ஆணையர் ஏ.கே.வி..!"

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

சென்னை அம்பத்தூரில் இயங்கும் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் 10-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மீண்டும் ஒன்று கூடும் நிகழ்ச்சி நேற்று(29-11-2019) நடைபெற்றது. 55 வயதை கடந்த முன்னாள் மாணவர்கள் 250-க்கும் மேற்பட்டவர்கள், இந்த நிகழ்வில் ஒன்று கூடி உறவாடி மகிழ்ந்தனர்.
 

nakkheeran

 

 

சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட முன்னாள் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்த மாணவர்கள், தங்களது அனுபவங்களை மெல்ல அசை போட்டனர். அதிலும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் பேச்சை வந்திருந்தவர்கள் வெகுவாக ரசித்தனர்.

கணக்கு எனக்கு வராது..!

"எனது பள்ளிக்காலத்தில் 11 பள்ளிக்கூடங்களில் படித்தேன். அதில் அதிக பட்சம் இரண்டரை ஆண்டுகள் கல்வி கற்றது இந்த பள்ளிக்கூடம் தான். 8,9,10 வகுப்புகள் இங்கு தான் படித்தேன். 1976-ல் நான் 8-ங்கிளாஸ் சேரும்போது பிரேமாவதி டீச்சர் தான் எனக்கு கணக்கு டீச்சர். அவங்க எனக்கு ரொம்ப மெனக்கெட்டு கணக்கு எடுப்பாங்க. ஆனால், எனக்கு கடைசி வரைக்கும் கணக்கு வரவே இல்லை. அப்புறம் சுகுமாறன் சார் எனக்கு டியூசன் எடுத்தார். கடைசி வரைக்கும் அவங்களால எனக்கு கணக்கு சொல்லி கொடுக்க முடியலை. எனக்கும் வரலை... ஆனா எப்ப பார்த்தாலும் அன்பா பேசுவாங்க... பரவாயில்ல விடுடா... வருகிறது தான வரும்? என்று சொல்லி  கற்றுக் கொடுக்க ரொம்ப முயற்சி பண்ணுவாங்க..

40 வருஷ நண்பன்..!

பலராமன் சார் தான் எனக்கு கிளாஸ் டீச்சர்.  அவரை பற்றி ஒரு விஷயத்தை சொல்லனும். 8-ங்கிளாஸ் படிக்கும்போது அவரோட மேரேஜூக்கு லீவு கிடைக்கலை... காலையில் தாலி கட்டிட்டு, மதியம் ஸ்கூலுக்கு வந்திட்டார். இந்த பள்ளியில் நிறைய பிரண்ட்ஸ் கிடைச்சாங்க...அப்புறம் நான் 8-ங்கிளாஸ்ல பெஞ்சில் மோகன் பக்கத்தில தான் உட்கார்ந்தேன். இப்போது வரைக்கும் எனக்கும் அவனுக்குமான நட்பு தொடர்கிறது" என்று எதார்த்தமாக பேசி முடித்தார் ஏ.கே.வி.

அப்போது 40 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளில் மூழ்கி இருந்தனர் ஏ.கே.வி.யின் தோழர்கள்..!

 

 

சார்ந்த செய்திகள்