Published on 25/02/2021 | Edited on 25/02/2021

தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் செய்தனர். மேலும் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவகத்தில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக புதன்கிழமை (24.02.2021) காலை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மாலதி தலைமையில் திரண்ட மாற்றுத்திறனாளிகள், அருகில் இருக்கும் மாநிலங்களில் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்குவது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்கிற அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.