Published on 16/10/2018 | Edited on 16/10/2018
![petrol](http://image.nakkheeran.in/cdn/farfuture/pTnVERR6A3PreEARdUjzAI4jJFYnZFNUT8wnDyAj1wA/1539678338/sites/default/files/inline-images/fuel_price_hike.jpeg)
சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு காரணமாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர வாய்ப்புள்ள நிலையில், இன்றும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து ரூ 86.10 ஆகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ 80.04 ஆகவும் விற்பனையாகிறது.