Skip to main content

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

jk


முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கடந்த 91ம் ஆண்டு தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 15க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் பெண் உள்ளிட்ட 7 பேரை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இதில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். 

 

அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் இதுதொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரை ஆளுநரிடம் கிடப்பில் உள்ள நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத சிறைவிடுப்பு வழங்கி தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்