கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமரம் அருகே உள்ள வேலப்பநாடாரூரில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது. இதையடுத்து இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மிகவும் மோசமான நிலையில் இருந்த கட்டிடத்தில் இருந்து வாடகை கட்டிடத்திற்கு ரேஷன் கடை மாற்றப்பட்டது.

Advertisment

nellai taluk ration shop children's playing game peoples shock

பழுதடைந்து காணப்படும் ரேஷன் கடை கட்டிடம் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் சுமார் 50 குழந்தைகள் படித்து வருகின்றனர். ரேஷன் கடை கட்டிடத்தில் பள்ளி குழந்தைகள், ஆபத்தின் விபரீதம் தெரியாமல் விளையாடி வருகின்றனர். எனவே ரேஷன் கடையை இடித்து விட்டு புதிய கடை கட்டித்தர சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.