Skip to main content

பள்ளி திறப்பையொட்டி வசிப்பிடம் திரும்பும் மக்கள் - பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம்

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

nn

 

பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிவடைந்து ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மே மாதம் முழுவதும் விடுமுறை இருந்ததால் குழந்தைகள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் இருந்தனர். இன்னும் சிலர் சுற்றுலாவிற்காக பல்வேறு இடங்களுக்கு கிளம்பி சென்றனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு ரயில் நிலையம் பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

 

அனைத்து ரயில்களிலும் முன்பதிவு நிறைந்ததால் பொதுப் பெட்டிக்கு இடம் கிடைக்க போட்டாபோட்டி நடந்தது. நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இதைப்போல் அனைத்து பஸ்களும் நிரம்பி வழிந்ததால் மக்கள் சிரமம் இன்றி செல்லும் வகையில் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

 

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் சொந்த ஊருக்கு சென்றவர்கள் இன்று முதல் ஈரோட்டுக்கு வந்த உள்ளம் உள்ளனர். இதனால் இன்று ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வழக்கத்திற்கு அதிகமாக இருந்தது. குடும்பம் குடும்பமாக ரயில் நிலையம் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். வெளி மாநிலம் வெளி மாவட்டத்திலிருந்து ஈரோடு வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் நிரம்பி வழிந்தன. இன்று அதிகாலை முதல் ஈரோடு ரயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. இதைப்போல் பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கின. நாளை இதைவிட பஸ் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்