குடியுாிமைச் சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடாில் கேரளா, புதுச்சோி மாநிலங்களைப் போன்று குடியுாிமைச் சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக் கிழமை சென்னை வண்ணாரபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசாா் தடியடி நடத்தினா். இதைக் கண்டித்து தமிழகம் முமுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. அன்றுமுதல் தொடர்ந்து வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது.
தொடர் போராட்டத்தின் 20 வது நாளான நேற்று (05/03/20) குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட வெள்ளை நிற க்ளவுஸ்களை அணிந்துகொண்டு தேர்தலில் வாக்களித்ததன் அடையாளமாக மை இடப்பட்ட ஒரு விரலை உயர்த்திக் காட்டியவாறு CAA,NRC,NPR க்கு எதிரான தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், டெல்லி கலவரத்திற்கு காரணமான கபில் மிஸ்ராவிற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ள மத்திய அரசின் செயலை கண்டித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்