Published on 26/03/2025 | Edited on 26/03/2025

சேலம் மாவட்டம், கோனேரிப்பட்டி அருகே உள்ள பூமணியூரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 57). இவரது மனைவி லட்சுமி (வயது 43). கோனேரிப்பட்டியில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள மீன்கடை ஒன்றில் முத்துசாமி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அவர் ஈரோடு மாவட்டம், மேட்டூர் ரோட்டில் உள்ள மதுபான கடையின் பாரில் நேற்று (25.03.2025) அவரது நண்பருடன் மது அருந்தச் சென்றார்.
அதன்படி அவர்கள் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சூழ்ந்த மலைத்தேனீக்கள் கொட்டியதில் முத்துசாமி மயக்கமடைந்தார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே முத்துசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.