Published on 09/04/2023 | Edited on 09/04/2023
திருச்சியில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு சசிகலாவிற்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு ஓ. பன்னீர்செல்வம் சூசகமாகப் பதிலளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், “திருச்சியில் ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுகவின் 51 ஆம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் அதிமுகவின் தொண்டர்கள் கலந்துகொண்டு வலிமையை நிரூபிப்பார்கள். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்படும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாநாட்டிற்கு சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முறைப்படி அறிவிப்பு வரும். அதில் அனைவரும் கலந்துகொள்வார்கள்” என்று சூசகமாகப் பதிலளித்தார்.