Skip to main content

'இங்கு பாஜக வேண்டாம்...' சாலையில் உருண்டு அதிமுக நிர்வாகிகள் போராட்டம்!

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

admk kovai

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று (09.03.2021) இரவு விடிய விடிய நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

 

அண்மையில் பாஜக போட்டியிட விரும்பும்  தொகுதிகள்  மற்றும் வேட்பாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி இருந்தது. அதில் கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிமுகவின் கோட்டையாக இருக்கக்கூடிய கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு கொடுக்கக்கூடாது. வானதி ஸ்ரீனிவாசனை அங்கு நிறுத்தக் கூடாது என அதிமுகவின் அம்மன் அர்ஜுனனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் சாலையில் படுத்து உருண்டபடி போராட்டத்தில் ஈடுபட்டார். ‘எங்கள் கோரிக்கைகையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வோம்’ என ராஜினாமா கடிதத்துடன் எச்சரிக்கை விடுத்தனர் அதிமுக நிர்வாகிகள். 

 

 

சார்ந்த செய்திகள்