
'நிவர்' புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
302 குடிசைகள் முழுமையாகவும் 1,439 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. அதேபோல் 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 161 ஓட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இந்தப் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். அதேபோல் நிவர் புயலின் போது 60 மாடுகள், 5 எருதுகள், 65 கன்றுகள், 114 ஆடுகள் உயிரிழந்துள்ளதாகவும். மாடு ஒன்றுக்கு 30 ஆயிரம், எருது ஒன்றுக்கு 15 ஆயிரம், கன்றுகளுக்கு 16 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும். ஆடு ஒன்றுக்கு 3,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல் வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரத்தில் வெள்ள நீர் தேங்குவதை தவிர்க்க நிரந்தரத் தீர்வு காண திட்டமிட அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.