தடை செய்யபட்ட தீவிரவாத இயக்கங்களோடு தொடர்பு வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து நெல்லை வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டிலும் புளியங்குடி மைதீன் என்பவரது வீடு மற்றும் கடையிலும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதனையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை 7 மணி முதலே இச் சோதனை நடைபெற்று வருகிறது.
தடைசெய்யபட்ட தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு வைத்திருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் இராமநாதபுரம், மேலப்பாளையம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் தீவிரவாதிகள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து கோவையில் சோதனை நடத்தபோது கிடைத்த தகவலின் படி நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி பகுதியில் வளைகுடா நாட்டில் வேலை பார்த்த திவான் முஜிபூர் என்பவரது கொச்சியில் இருந்த வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர்.இந்த சோதனையின் போது அவர் வீடு அமைந்து இருக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டு இருந்தது. இதே போல் தென்காசி அருகே உள்ள புளியங்குடி பகுதியில் உள்ள மைதீன் என்பவரது இல்லம் மற்றும் அவரது பெயிண்ட் கடையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மைதீன் மற்றும் திவான் முஜீபுர் இருவரும் உறவினர்கள் ஆவர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
திவான், மைதீனின் உறவினர் என்பதால் புளியங்குடியில் தங்கி அவரது கடையில் வேலை பார்த்துவருபர். அவர் சில நாட்களுக்கு முன்பு சாட்டிலைட் போன்ற பயன்படுத்தி சிலரிடம் பேசிவந்திருக்கிறார். இந்த போன் தீவிரவாத அமைப்புகளிடமே பயன்படுத்தப்பட்டு வருவதால் அதனை இந்தியா உட்பட 14 நாடுகளில் தடை செய்துள்ளனர். தங்களிடம் பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் திவான் முஜிபுரிடம் சாட்டிலைட் போன் இருப்பது தெரியவர கொச்சி என்.ஐ.ஏ. அலுவலக, டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான 12 அதிகாரிகள் 6 பேர் வீதம் வெள்ளாங்குழி மற்றும் புளியங்குடியில் இன்று காலை திவான் முஜிபுரின் அறைக்குள் புகுந்து சோதனை நடத்தியுள்ளனர்.
அவரிடம் வாக்கு மூலம் வாங்கிய டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் திவானை கொச்சியிலுள்ள என்.ஐ.ஏ. எஸ்.பி. முன் ஆஐராகும்படி சம்மன் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். வெள்ளாங்குளியில் உள்ள அவரது வீட்டில் சிம் கார்டுடன் கூடிய 3 செல்போன்களை கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் புழக்கமிருந்தது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.